அசாமில் மீண்டும் கலவரம்
16th August 2012 · 0 Comments
அசாம் மாநிலத்தில் போடோ அமைப்பினருக்கும், வங்காள தேசத்தில் இருந்து குடியேறியவர்களுக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 77 பேர் பலியானார்கள்.இந்த கலவரம் தொடர்பாக மாநில அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஒரு வாரமாக வன்முறை கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் கலவரம் ஏற்பட்டது.
கோகராஜ்நகர் மாவட்டம், பக்சா அருகே கலவரம் வெடித்தது. காலை 10.30 மணி அளவில் வாகனத்தில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடந்தது. அதோடு வாகனமும் தீவைக்கப்பட்டது. மேலும் பல வாகனங்களும் தீவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பெரும்பாலான இடங்களில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
By suriyantv
