Filed Under:  தமிழகம்

கூடங்குளம் அணுஉலையில் எரிபொருளை நிரப்ப அணுசக்தி ஒழுங்குமுறை அனுமதி.

11th August 2012   ·   0 Comments

கூடங்குளம் அணுஉலையில் எரிபொருளை நிரப்ப மத்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய அணுசக்தி கழகம் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையிலும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டதன் அடிப்படையிலும் இந்த அனுமதி வழங்கப்படுவதாக அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளின் மேற்பார்வையில் கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர் மற்றும் விபத்துகளால் பாதிக்கப்படாத அளவு அணுஉலை சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளளது என்றும் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஃபுகுஷிமா அணுஉலை விபத்திற்குப் பின்னர் கூடங்குளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Readers Comments (0)





RECENT POSTS

CALENDAR

May 2013
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031