Filed Under:  தமிழகம்

6 1/2 லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வில் 2 ஆயிரம் பேர்தான் தேர்ச்சி

11th August 2012   ·   0 Comments

ஆசிரியர் தகுதித்தேர்வை 6 1/2 லட்சம் பேர் எழுதினர். இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளை 2 1/2 லட்சம் பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாளை 4 லட்சம் பேரும் எழுதினார்கள். இதில் 55 ஆயிரம் பேர் இரண்டு தேர்வையும் எழுதினர். ஒவ்வொரு தேர்வும் 150 மதிப்பெண்களுக்கு நடந்தது. தேர்வுக்கு 90 நிமிடங்கள் வழங்கப்பட்டது. தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
இந்த 2 தேர்வுகளும் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறினார்கள். விடையளிக்க போதிய கால அவகாசம் இல்லை எனவும், இதனால் அனைத்து வினாக்களுக்கும் முழுமையாக விடையளிக்க முடியவில்லை என்று புகார் தெரிவித்தனர். விடைத்தாள்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டன. முக்கிய விடைகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.
விடைத்தாள்கள் மதிப்பீடு செய்ததில் மொத்தம் 2 ஆயிரம் பேர் மட்டுமே இரண்டு தேர்வுகளிலும் சேர்த்து தேர்ச்சி பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. 5 சதவீத பேர் கூட தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்த தேர்வின் அடிப்படையில்தான் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும் 5 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்களும் தேர்ந் தெடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவில் இருப்ப தால் மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக அரசிடம் ஆலோசனை நடத் தப்படுகிறது. குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 90 என்று இருப்பதை 70 அல் லது 80 ஆக குறைத்தால் மேலும் பல ஆயிரம் பேர் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். அதனால் மதிப்பெண்ணை குறைக்க முடிவு செய்யப்படுகிறது. இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் வருகிற வாரம் விசாரணைக்கு வருகிறது.
அந்த வழக்கு விசாரணை தேர்வு மதிப்பெண் குறைப்பது தொடர்பான ஆலோசனை போன்ற காரணங்களாலும், தேர்வர்களின் தவறுகளை சரி செய்ய அவகாசம் தேவைப்படுவதாகவும் தேர்வு முடிவு வெளியாவதில் சில வாரங்கள் தாமதமாகும் என்று தெரிகிறது. இந்த தேர்வில் தேர்ச்சியடையாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு தேர்வு நடத்தும் யோசனையும் பரி சீலனையில் உள்ளது.

By

Readers Comments (0)





RECENT POSTS

CALENDAR

May 2013
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031