Filed Under:  இந்தியா

துணை ஜனாதிபதியாக ஹமீத் அன்சாரி பதவி ஏற்றார்

11th August 2012   ·   0 Comments

துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி பதவி காலம் முடிந்தததை தொடர்ந்து கடந்த 7-ந் தேதி தேர்தல் நடந்தது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஹமீத் அன்சாரி பாஜக கூட்டணி சார்பில் ஜஸ்வந்த் சிங் போட்டியிட்டனர். பாராளுமன்றத்தில் உள்ள 63-ம் எண் அறையில் வாக்குப்பதிவு நடந்தது. தேர்தல் முடிவில் ஹமீத் அன்சாரி மிக எளிதான வெற்றியை பெற்றார்.
மொத்தம் பதிவான 796 ஓட்டுக்களில் 8 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 788 ஓட்டுக்களில் அன்சாரிக்கு 490 வாக்குகளும் ஜஸ்வந்த்சிங்குக்கு 238 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு பிறகு 2-வது தடவை துணை ஜனாதிபதி ஆனவர் என்ற சிறப்பு ஹமீத் அன்சாரிக்கு கிடைத்துள்ளது.
அன்சாரி பதவி ஏற்கும் விழா இன்று பகல் 11 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விழாவுக்கு தலைமையேற்று அன்சாரிக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.
விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

By

Readers Comments (0)





RECENT POSTS

CALENDAR

May 2013
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031