Filed Under:  வர்த்தகம்

தங்கம் விலை அதிரடி உயர்வு

27th October 2011   ·   0 Comments

தங்கம் விலை அதிகரித்துள்ளது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் (அக்.26) பவுனுக்கு ரூ.736 அதிகரித்தது. இந்நிலையில், மக்களுக்கு மேலும் பேரதிர்ச்சியாக இன்று தங்கம் பவுனுக்கு ரூ. 648 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை அடிக்கடி ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. கடந்த மாதம் ஒரு பவுன் தங்கம் 21 ஆயிரம் ரூபாயை கடந்தது. கடந்த சில  தினங்களாக தங்கம் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரம் அளவுக்கு இறங்கியது. இதனால் தங்கம் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்த நிலையில் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் (அக்.25) ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.20 ஆயிரத்து 128 ஆக இருந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.2,516 ஆக  இருந்தது. நேற்று தீபாவளியை முன்னிட்டு, விடுமுறை தினமாக இருந்த போதிலும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை  பவுனுக்கு ரூ.648 அதிகரித்தது. நகைக் கடைகளில் ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 776 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.2,597 ஆகவும், 24 கேரட் கிராம் ஒன்றின் விலை ரூ. 2,777.50 என்ற அளவிலும், சவரன் ரூ. 22,220.00 என்ற அளவிலும் உள்ளது.
பார் வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 55480 என்ற அளவிலும், சில்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு ரூ. 59.35 என்ற அளவில் உள்ளது.
அமெரிக்கா சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்தியாவில் தங்கம் விலை அதிரித்து இருப்பது தேரிய வந்துள்ளது. தஙகம் விலை மேலும் உயரும் என்றும், ஒரிரு நாட்களில் ஒரு பவுன் தங்கம் விலை 21 ஆயிரம் ரூபாயை கடக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

By

Readers Comments (0)





RECENT POSTS

CALENDAR

June 2013
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930