August 2012 Archive
http://youtu.be/vo81F2Ehn0Q சென்னை ஆடை உற்பத்தியாளர்கள் சங்க 7ஆவது ஆண்டு ஆடை கண்காட்சி இன்று தொடங்கியது. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ‘டிரன்ட் எடிசன் 2012 என்ற தலைப்பில் 7வது ஆடை கண்காட்சி இன்று தொடங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியை சபாநாயகர் ஜெயக்குமார் தொடங்கி ... முதல்வர் ஜெயலலிதா கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
சென்னை, ஆக. 8- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாள் வாழ்த்துச் செய்தி வருமாறு:- கண்ணபிரான் அவதரித்த இத்திருநாளை “ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி” என்றும் “கோகுலாஷ்டமி” என்றும் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை ... டெசோ மாநாடு பற்றி இலங்கை அரசு தவறான பிரசாரம்: கருணாநிதி அறிக்கை
சென்னை, ஆக. 8- தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கை அரசின் சார்பாக 6-8-2012 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், டெசோ மாநாடு இலங்கைக்கு எதிரான விஷயம் என்றும், இந்த மாநாட்டிலே கலந்து கொள்ளும் இலங்கையர்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும், ... மத்திய மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக் தொடர்ந்து கவலைக்கிடம்
மத்திய மந்திரி விலாஸ் ராவ் தேஷ்முக். கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள பீச் ஹேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து வந்ததால், அவர் சென்னை குளோபல் ஆஸ்பத்திரியில் கடந்த திங்கட்கிழமை சேர்க்கப்பட்டார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் ... மோசடி ஈமு நிறுவன படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் மீது நடவடிக்கை: 2-வது நாளாக பொதுமக்கள் முற்றுகை
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுசி ஈமு கோழிப் பண்ணை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் சார்பில் ஈமுவுக்கென பிரத்யேகமாக ஓட்டல்களும் திறக்கப்பட்டன. இதன் கிளைகள் தமிழகம் மட்டுமல்லாமல் பாண்டிச்சேரி, டெல்லி போன்ற இடங்களிலும் செயல்பட்டு வந்தன. இந்த சுசி ஈமு நிறுவனம் ... கனமழை-நிலச்சரிவுக்கு 8 பேர் பலி: கேரள அணை உடையும் அபாயம்கனமழை-நிலச்சரிவுக்கு 8 பேர் பலி: கேரள அணை உடையும் அபாயம்
திருவனந்தபுரம், ஆக. 8- கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டி வந்தது. கேரளா முழுவதும் பெய்ய வேண்டிய பருவமழை இந்த ஆண்டு வட கேரள பகுதியில் மட்டும் பெய்து வந்தது. குறிப்பாக கோழிக்கோடு, கண்ணனூர், வயநாடு மாவட்டங்களில் ... ஓடும் ரயிலில் இருந்து பச்சிளம் பெண் குழந்தையை வீச முயன்ற தாய்: மடக்கிப் பிடித்த பயணிகள்
ஓடும் ரயிலில் இருந்து தொப்புள்கொடி கூட அறுக்காத பச்சிளம் பெண் குழந்தையை வீச முயன்ற பெண்ணை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மின்சார ரயில் ஒன்று செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி இன்று காலை வந்து கொண்டிருந்தது. அதில் பயணித்த பெண் ஒருவர் ... மு.க.ஸ்டாலின், டைம்ஸ் ஆப் இந்தியா மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் ஆகியோர் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிர் ஜெகன், சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2ம் தேதி வெளியான ... உறுப்பினர்கள் அமளி: லோக்சபா 2வது முறையாக ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத் தொடர் இன்று துவங்கியது. எதிர்கட்சியினர் மற்றும் ஆளுங்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபா இன்று 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இரு அவைகளும் கூடியவுடனேயே அஸ்ஸாம் வன்முறை குறித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ... மத்திய தேர்தல் ஆணையராக சையத் நஸீம் அகமத் ஜைதி நியமனம்
மத்திய தேர்தல் ஆணையராக முன்னாள் விமான போக்குவரத்துத் துறைச் செயலாளர் சையத் நஸீம் அகமத் ஜைதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்தார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜைதி, கடந்த 1976ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார். கடந்த ஜூலை 31ம் தேதி ...
Next Page »









