August 2012 Archive
சென்னை, ஆக.2- தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை 1076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை பகுதியில், தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாக அத்தியாவசியப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும், தமிழ்நாட்டிற்கு தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் ... 114 கோவில்களுக்கு அறங்காவலர் குழு பட்டியல் தயார்: அமைச்சர் ஆனந்தன் பேட்டி
வேலூர் மண்டலத்துக்குட்பட்ட வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் ஆனந்தன் தலைமையில் நடந்தது. இதை தொடர்ந்து அமைச்சர் ஆனந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:- கோவில்களில் அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளன. ... பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ரக்ஷா பந்தன் செய்தி
புதுடெல்லி, ஆக. 2- நாடு முழுவதும் இன்று ரக்க்ஷாபந்தன் நாளையொட்டி பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக நினைக்கும் ஆண்களுக்கு ராக்கி கட்டி வாழ்த்து பெற்றனர். இதையொட்டி டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த குழந்தைகள் ராக்கி கட்டி மகிழ்ந்தனர். ... அசாம் ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: 60 கிராமங்கள் பாதிப்பு
லகிம்பூர், ஆக. 2- அசாம் மாநிலம் லகிம்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் 60 கிராமங்களில் உள்ள சுமார் 70 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்ரா நதியில் கடும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரத்தில் உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 40 ... நான் ஈ படத்தின் திருட்டு வீடியோ தயாரிக்க உதவிய கோவை தியேட்டர் இழுத்து மூடப்பட்டது.
சென்னையில் உள்ள திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பிரதீப்பிலிப்பிடம் நான் ஈ பட தயாரிப்பாளர் ஒரு புகார் மனு அளித்திருந்தார். அந்த மனுவில், கடந்த மாதம் 6-ந் தேதி நான் தயாரித்த நான் ஈ என்ற சினிமா படம் ... செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க விண்கலம் தரையிறங்கும் காட்சி நேரடி ஒளிபரப்பு.
செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் "ரோவர்' விண்கலம் தரையிறங்கும் நிகழ்ச்சி நியூயார்க்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்துக்கு "ரோவர்' விண்கலத்தை அனுப்பியது. 250 கோடி டாலர் செலவில் அனுப்பப்பட்டுள்ள ... லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் இந்திய உணவுத் திருவிழா
லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் இந்திய உணவுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வாரம் துவங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இரண்டு நாள் இந்திய உணவுத் திருவிழா நேற்று துவங்கியது. தேம்ஸ் நதிக்கரையில் உள்ள ராயல் விழாக் கூடத்தில் இந்த ... அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்: இறந்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.33 ஆயிரம் கோடி
அமெரிக்காவில் 2001-ம் ஆண்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.33 ஆயிரம் கோடி அளிக்க அந்நாட்டு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. கடந்த ஆண்டு, இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து வந்த நீதிபதி ஜார்ஜ் டேனியல், இந்தத் தாக்குதலில் உண்டான சேதம் ... ஒலிம்பிக் சைக்கிளிங்: 2 வயது குழந்தையின் தாய் தங்கம் வென்று சாதனை
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற பெண்களுக்கான சைக்கிள் பந்தயத்தில் 39 வயதான அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டின் ஆம்ஸ்ட்ராவ் தங்கப்பதக்கம் வென்றார். இவருக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று பெண்களுக்கான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவை ... மியான்மர் நாட்டில் சிறுபான்மை பெண்களை கற்பழித்த ராணுவம்
மியான்மர் நாட்டில் உள்ள ரோகின் கயா பகுதியில் கடந்த மாதம் பயங்கர மத கலவரம் ஏற்பட்டது. மியான்மரில் புத்த மதத்தினர் அதிகமாக உள்ளனர். இதுபோல சிறுபான்மை மதங்களும் உள்ளன. இதில் புத்தமதத்தினருக்கும், ஒரு சிறுபான்மை மதத்தினருக்கும் இடையே மோதல் நடந்தது. இந்த கலவரத்தில் ...
Next Page »










